இறைவனைப்பற்றி பேசுவதற்கு முன், நாம் நன்கு அறிந்த மனிதனைப்பற்றி பேசுவது அல்லது மனித ஐம்புலன்களாலும் பகுத்தறிவாலும் ஆராச்சியாலும் அனுபவித்றிந்தவைகளைப் பற்றி பேசுவது சுலபமாயிருக்கும். சரியானது மிகப் பொருத்தமானது. மனிதன் இவ்வுலகில் வாழும் பிராணிகளில் ஒரு தலை
பிராணி.
ஆனால் மனிதனும் அவனுடைய திறமைகளும் சக்திகளும் எல்லைகளைக் கொண்டவை. பார்க்க கேட்க உணர சிந்திக்க சீவிக்க இவை எல்லாவற்றிற்கும் எல்லைகள் உண்டு. சக்திகள் வளர்ச்சி முன்னேற்றமடைகின்றன. ஆனால் எல்லைகள் உண்டு!!!
இவைகளுள் மனித விவேகமும் ஒவ்வொன்றையும் பகுத்தறியும் திறனும் மனிதனை தாகத்துடன் தேடி உண்மைகளையும் அடிப்படைக் காரணங்களையும் கண்டு பிடித்து ஆராச்சியில் வியத்தகு முறையில் முன்னேற வழி வகுக்கிறது. மனிதன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அறிவில் ஆராச்சியில் மகத்தான வெற்றிகளைக் கண்டு முன்னேறி வருகிறான். முன்பு ஒரு பொழுதும் நினைக்கவோ கற்பனை செய்ய முடியாதவைகளைக் கண்டறிந்து விட்டான் சாதித்தும் விட்டான்.
அதே சமயத்தில் மதங்களைப் பற்றி பேசுவதற்கு நாம் போதிய அனுபவ அறிவு பெற்றிருக்கிறோம்.அவைகளைப் பற்றி ஓரளவிற்கு நாம் பேச முடியும்.
இயற்கை விஞ்ஞானஙகளை ஓர் அளவிற்கு கற்றுக் கொண்டவன் நான் இன்றும் மிக மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் இவைகளை பின் தொடருகின்றேன். ஏன்?
எமது நூற்றாண்டின் மிகச்சிறந்த சிறந்த விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்ரைன். அவர் சகல படைப்புகளுக்கும் காரணமாகிறது ஓர் சுப்பர் கியூமன் super-human சக்தியை ஏற்று விசுவாசத்தை வெளிப்படுத்தினார். மனித ஐம்புலன்களுக்கு அப்பால் பட்ட ஒரு பொருளை அல்லது சக்தியைத் பற்றி ரூபிக்க சிந்தனை செய்ய இறைவனால் சிருட்டிக்கப் பட்ட எமது ஐம்புலன்கள் போதாது. ஆகையினால் காண கேட்க ஐம்புலன்களால் அனுபவிக்க முடியாத ஒன்றிலுள்ள விசுவாசம் கொள்கிறார்.