ஏன் போதகர் இயேசு சினத்துடன் சீறி
அட்டகாசமாக ஆலயப பெருவிழா ஆயத்தங்களைச் சிதறடிக்கின்றார்
(யோவான் 2: 13-22)
அட்டகாசமாக ஆலயப பெருவிழா ஆயத்தங்களைச் சிதறடிக்கின்றார்
(யோவான் 2: 13-22)
“யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமிற்குச் சென்றார்.”
இறைவன் யூதமக்களை அடிமைத்தனங்களிலிருந்து விடுதலைக்கு நீண்ட பயணத்தினூடாக இட்டுச் சென்றார்.
வனாந்திரத்தினூடான விடுதலைப் பயணத்தின்போது பல அற்புதங்களையும் படிப்பினைகளையும் கொடுத்து அம்மக்களைத் தம் மக்களாகவும் தாமே உண்மையான கடவுளென்றும் மீண்டும் மீண்டும் கற்பித்தார். பொய் தேவர்களையும் விக்கிர ஆராதனைகளையும் கடுமையாகக் கண்டித்தார்.
இஸ்ரவேலர் உண்மையான ஒரே கடவுளை வழிபடவும் தமது அற்புதங்கள் நிறைந்த விடுதலை நிகழ்வுகளை நினைவுகூரவும் விழாக் கொண்டாடவும் எருசலேமில் ஆலயம் அமைத்தார்கள். அங்கு விடுதலை நினைவுகூரும் விழாவைப் பாஸ்கா விழாவாகக் கொண்டாடினர்.
ஆனால் இவ்விழாவின் சடங்குகள் பலவித மாற்றங்களைப் படிப்படியாகக் கண்டன.
கண்டிப்பது மாத்திரமல்ல அவர்களுடைய மேசைகளைப் புரட்டிப் பணப் பெட்டிகளையும் தூக்கி எறிந்து உரத்த குரலில்
புனிதமான என் தந்தையின் இல்லத்தை மாசுபடுத்தாதீர்!
என்றார்.
இயேசு ஜெருசலேம் தேவாலயத்திற்குள் ஏன் இவ்வளவு சினங்கொண்டார்? ஏன் சிதறடித்தார்? ஏன் அட்டகாசம் பண்ணினார்? என்ற கேள்விகளை நாம் பார்க்கும்பொழுது பல சிந்தனைகள் எழுகின்றன.
இரக்கம் நிறைந்த இறைவனின் மகன் இயேசுஇ அன்பு நிறைந்த அந்த இயேசு ஏழைகள் மட்டிலேஇ துன்பப்படுபவர்கள் மட்டிலேஇ கண்தெரியாதவர்கள்இ பேசமுடியாதவர்கள்இ பலவிதமான உபத்திரங்களுக்கு உள்ளாகி வேதனைப்படுகிறவர்களுக்கு ஆறுதல் கொடுப்பவர். அவர்களைக் குணமாக்கினவர். இரக்கம் காட்டியவர். அன்பு செய்தவர் அப்படியான ஒரு இயேசு இந்த ஜெருசலேம் தேவாலயத்திற்குள்ளே இவ்வளவு சினங்கொண்டு எல்லாவற்றையும் சிதறடித்து மேசைகள புரட்டி பொருட்களை எறிந்து மக்களைச் அடித்து துரத்துகின்றார்! ஏன் இவ்வளவு அட்டகாசம் பண்ணினார்? இதற்குள் ஆழமான கருத்தொன்று இருக்கின்றதா?
இஸ்ரவேல் மக்கள் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் இறைவனினாலே. விடுதலை அளிக்கும் இறைவன் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து அவர்களை விடுதலைப் பயணத்திலே மோயீசன் தலைமைத்துவத்திலே கொண்டுவந்தவர் .
அந்த விடுதலையடைந்த யூதசமூகம் ஜெருசலேம் தேவாலயத்தை அந்த விடுதலையின் நினைவாகக் கட்டியெழுப்பி அந்த ஜெருசலேம் தேவாலயத்தில் தான் தங்களை இரட்சித்த இறைவன் இருக்கின்றார் என்ற அந்த உன்னத சிந்தனையுடன் யூதமக்கள் அனைவருக்கும் அந்த ஜெருசலேம் தேவாலயம் இந்த உலகத்திலே இறைவனின் பிரசன்னம் என்றாற்போல அவர்கள்
அங்கே கூடுவார்கள். அங்கே கூடி தங்களுடைய பெரிய விடுதலையை நினைவுகூருவதற்கு பாஸ்கா விழாவைக் கொண்டாடுவார்கள். இதுதான் யூதர்களுடைய மிகமிகப் பெரிய விழா. அந்தப் பெரிய விழாவை ஜெருசலேம் தேவாலயத்தில் கொண்டாடுவார்கள்.
அப்படியான ஒரு விழாவிற்குத்தான் இயேசுவும் அங்கே செல்கின்றார். ஒரு நோக்கத்துடன் செல்லுகின்றார். புனிதமான நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு திருவிழா புனிதமாக மீட்கப்பட்ட மக்கள் நினைவாகக் கட்டப்பட்ட ஒரு தேவாலயம். இந்தப் பெரிய பரந்த தேவாலயத்திற்குள்ளே நடக்கும் அந்த நன்றிப் பாஸ்கா விழாவை மக்கள் கொண்டாட வருகின்றார்கள். ஆகையினாலே இந்த ஜெருசலேம் தேவாலயத்திலே நடைபெறும் பாஸ்கா விழா யூதர்களின் சரித்திரத்திலே ஒரு மிக மிகப்பெரிய உச்சிதமான ஒரு திருவிழா.
ஆனால் அன்றைக்குப் பல ஆண்டுகளின் பின் அந்தத் திருவிழாவின் உருவம் மாறி ஆரம்ப நோக்கங்கள் மறைந்து அவர்கள் அங்கு செய்யவேண்டிய நன்றி உணர்வுகளைத் தெரிவிக்காது அல்லது நன்றிப் பலிகளைச் செலுத்தாது அவர்கள் அந்தத் திருவிழாவை வேறொரு உலக பண்டிகையாக மாற்றி அங்கே கடைகளை போட்டு தங்களுடைய கொண்டாட்டங்களுக்குத் தேவையானவற்றை விற்பனை செய்துஇ காசு பரிமாறி அதாவது சந்தைகளைப் பெருக்கி மக்கள் பிழையான வழியிலே நடந்துகொண்டிருந்தார்கள். ஆகையினால்தான் இயேசு கையிற்றைப் பின்னி அவர்கள் எல்லோரையும் அடித்து விரட்டி அட்டகாசம் செய்து மேசைகளை விழுத்தி புனிதமான என் தந்தையின் இல்லத்தை மாசுபடுத்தாதீர்கள் என்று கூறுகின்றார்.
இயேசு சினங்கொண்டு சாட்டை பின்னி மக்களைச் சிதறடித்த இந்தச் சம்பவத்தின் பின்னணியிலே நாங்கள் இன்றைய
திருச்சபை ஆகிய நாங்கள் திருச்சபையின் தலைவர்களாகிய நாங்கள் ஆயர்கள் குரக்கள் துறவிகள் வழிபாடு நடத்துபவர்கள் ஆலயத்தைப் பராமரிப்பவர் ஆகிய அனைவரும் இந்தப் பின்னணியிலே பல கேள்விகளை எழுப்ப வேண்டி இருக்கின்றது.
இன்றைக்கு இயேசு எங்கள் மத்தியிலே தோன்றுவாராக இருந்தால் எங்களுடைய ஆலயங்களைப் பற்றி எங்களுடைய ஆலயங்களின் வடிவங்களைப் பற்றி அதன் முறைமைகளைப் பற்றி திருச்சடங்குகள் கொண்டாடும் முறைமைகளைப் பற்றி அவைகளின் உருவத்தை பற்றி அவர் என்னத்தைக் கூறுவார்?
திருச்சபையின் சாரம்சம் என்ன? இயேசு வழியாகவும் உண்மையாகவும் வாழ்வாகவும் வந்தவர். மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையிலேயுள்ள தொடர்பை விளக்கி எங்களுக்கு மரணத்திற்கப்பால் வாழ்வு உண்டென்றும் அந்தத் திசையிலே பயணம் செய்ய எங்களுக்கு ஏதுவாக திசைகாட்டியாக வார்தையையும் கொடுத்து அதற்கு ஏதுவான தமது நற்கருணை விருந்தையும் கொடுத்து எங்களுக்கு வழிகாட்டி அந்த இயேசு இன்றைக்கு நாங்கள் நடாத்திக்கொண்டிருக்கும் எங்களுடைய ஆலய வைபவங்களைப் பற்றி எங்களுடைய ஆலயத் திருவிழாக்களைப் பற்றி கொண்டாடும் முறைகளைப் பற்றி அவர் என்னத்தைக் கூறுவார்?
நாங்கள் பல பல மாற்றங்களைச் செய்து முன்னேறியிருக்கின்றோம். 2ம் வத்திக்கான் சங்கத்தின் பின்பு எங்களுடைய வழிபாடுகள் வார்த்தை வழிபாடும் நற்கருணை விருந்தும் தமிழிலே முழுமையாக நடைபெறுகின்றன. மக்கள் விளங்கக்கூடிய விதமாக நடைபெறுகின்றன. மக்களுடைய பங்குபற்றுதலுடன் நடைபெறுகின்றன. மக்களும் குருவும் சேர்ந்து கூட்டுப்பலியாக ஒப்புக்கொடுக்கின்றாம். நல்லது. அதற்கு உகந்த பாடலஇகளைத் தமிழிலே அழகாகப் பாடுகின்றோம் எங்களுடைய கலை கலாசாரத்திற்கு அமைய அதற்கு இசைய
நாங்கள் எத்தனையோ அழகான காரியங்களைச் செய்கின்றோம்.
ஆனால் அவைகள் மத்தியிலும் நாங்கள் ஒரு கேள்வியை எழுப்பவேண்டும்.
நாங்கள் செய்துகொண்டிருக்கும் இந்த மாற்றங்கள் நாங்கள் கொடுக்கும் கரிசனைகள் சிலவேளைகளிலே எங்கள் வழிபாட்டின் மையப்பொருளாகிய வார்தையையும் அந்த நற்கருணைப் பகிர்வையும் மழுங்கடிக்க இருக்கின்றனவா என்பதைக் கேட்கவேண்டும்.
சிலவேளைகளில் நாங்கள் பண்பாட்டு மயமாக்குதல் என்ற போர்வையில் அளவுக்கு மிதமிஞ்சிய விதமாக எங்களுடைய கவனத்தை கரிசனையை பாத்திரங்களிலேயும் அதற்குக் கீழுள்ள சோடினைகளியேயும் பக்கவாத்தியங்களிலேயும் கமராக்களிலேயும் செலவழித்துவிட்டு அந்த மையப்பொருளான நற்கருணையை ஏற்படுத்துதல் அல்லது ஆண்டவருடைய வார்த்தையின் அந்த செய்தியை நாங்கள் அதற்குரிய முக்கியத்துவத்தைக் குறைத்து விடுகின்றோம். ஆகையினால்தான் நாங்களும் கவனமாக இருக்கவேண்டும்.
எங்களுடைய திருச்சபையின் சாரம்சத்தை கிறீஸ்துவின் செய்தியை கிறீஸ்து கொண்டுவந்த அந்த இரண்டு செல்வங்களையும் அதாவது அவருடைய வார்த்தையையும் அவர் எங்களுக்காக அர்ப்பணித்த அந்த உடல் இரத்தத்தையும் இவைகளை நாங்கள் மழுங்கடிக்காது எங்களுடைய வழிபாடுகளை வழிபாடுகளாக இறை மையத்துவம் வைத்திருக்கும் வழிபாடுகளாக பொருட்களில் அல்ல சோடினைகளில் அல்ல பக்கவாத்தியங்களில் அல்ல மாலைகள் பொன்னாடைகள் சுற்றுப்பிரகாரங்களில் அல்ல அவைகளுக்கு அளவளவாக இடங்கொடுத்து அந்த மையப்பொருளைத்தான் சிறப்பிக்க வேண்டும்.
எங்களுடைய திருச்சபையின் சாரம்சத்தை கிறீஸ்துவின் செய்தியை கிறீஸ்து கொண்டுவந்த அந்த இரண்டு செல்வங்களையும் அதாவது அவருடைய வார்த்தையையும் அவர் எங்களுக்காக அர்ப்பணித்த அந்த உடல் இரத்தத்தையும் இவைகளை நாங்கள் மழுங்கடிக்காது எங்களுடைய வழிபாடுகளை வழிபாடுகளாக இறை மையத்துவம் வைத்திருக்கும் வழிபாடுகளாக பொருட்களில் அல்ல சோடினைகளில் அல்ல பக்கவாத்தியங்களில் அல்ல மாலைகள் பொன்னாடைகள் சுற்றுப்பிரகாரங்களில் அல்ல அவைகளுக்கு அளவளவாக இடங்கொடுத்து அந்த மையப்பொருளைத்தான் சிறப்பிக்க வேண்டும்.
ஆயத்தங்களுக்கு நேரம்கொடுத்து வடிவாக இறைவனின் செய்தியை தெளிவாக மக்களுக்கு பகிர்ந்துகொள்ளவும் அதேநேரத்தில் நற்கருணை பலி விருந்தையும் பயபக்தியுடன் வணக்கத்துடன் செய்ய நாங்கள் முன்வரவேண்டும்.
ஆகையினால் தான் இன்று எங்களுடைய கோயில் திருவிழாக்களில் எத்தனையோ விதமான சடங்குகள் வைபவங்கள் கொண்டாட்டங்கள் நடக்கின்ற வேளையில் நாமும் கேள்வி எழுப்புகின்றோம்.
ஆகையினால் தான் இன்று எங்களுடைய கோயில் திருவிழாக்களில் எத்தனையோ விதமான சடங்குகள் வைபவங்கள் கொண்டாட்டங்கள் நடக்கின்ற வேளையில் நாமும் கேள்வி எழுப்புகின்றோம்.
இந்தத் திருவிழாக்கள் எங்களுடைய தமிழ் கிறீத்தவ மக்களுடைய தமிழ்ப்பண்பாட்டுமயமாக்குவதிலே மித மிஞ்சிய ஆர்வத்திலே சறுக்கி விழுந்து விட்டதா? அவைகள்_இப்போ மனித களியாட்ட விழாவாக மாறியிருக்கின்றனவா?
ஆலயங்களின் நோக்கமென்ன? அங்கே நடக்கும் திரு விழாக்களின் நோக்கமென்ன?