Tuesday, 6 September 2016

வியப்பும் நன்றியும் இணைந்த இறை வழிபாடு Tamil

கிறீஸ்தவர்களாக பல வழிபாடுகள் செய்கின்றோம்
இயேசுவின் ஊடாக இறைவனை வழிபடுகின்றோம்.
ஆனால் அவை போதாது.
இயேசுவின் வார்த்தையிலும் விரிந்திலும் ஊன்றி,
அவருடன் நடந்து கொண்டு,
இன்னும் ஆளமாக இறைவனை அனுபவிக்க
பல வழிகள் அல்லது வளிபாடுகள் உண்டு.
இயேசு கூறினார்
" நான் என் தந்தையுடனும் உங்கள் தந்தையிடமகின்றேன் " என்று.
இதன் அர்த்தமென்ன?
பிதாவிடமிருந்து வந்தவர் திரும்பி அவரிடம் செல்கின்றார்.
நாம் அவருடன் இணைந்து அவரின் வழி காட்டலில்
சிருட்டுப்பின் ஊற்றான எமது பரலோக தந்தையை
நோக்கி நடந்து கொண்டிருக்கின்றோம்.

பரலோக தந்தையை
இப்போதே மண்ணக வாழ்விலேயே|
அவரின் சிருட்டுப்புகளினூடாக அனுபவிக்கலாம்.
அவைகளையிட்டு வியப்படையலாம்.
அவைகளுக்காக நன்றி வழிபாடு செய்யலாம்.


இதை நான் எப்படி செய்கின்றேன்?

காலையிலும் மாலையிலும் எனது உடல் நலன் கருதி நடப்பதும் சைக்கில் ஓடுவதும் வழமை.
நடக்கும் பொழுது ஆன்மாவிற்கும் சிந்தனைக்கும் மெருகூட்டும் சங்கீதம் கேட்பேன்.
இவைகளுக்கு இடையில்| ஒரு இடைவெளி!

6 படிகளில்
எனது வியப்பையும் நன்றியையும் தெருவிக்கும் முகமாக
கரங்களைக் கூப்பி வானத்தை நோக்கி
எனது வியப்பையும் நன்றியையும் தெரிவிப்பேன்ம

முதல் மூன்று வியப்புகளும் இறைவனை  -
தெரிந்துகொள்ள முடியாதவராகவும் சக்திநிறைந்தவராகவும் சிருட்டிப்பின் காரணராகவும்
அடுத்த மூன்றிலும் இறைவனை -
தம்மையே வெளிப்படுத்துகிறவராகவும்
வணங்குகின்றேன்!

1. இறைவன்???வியப்பு!!!
யார்; என்ன எங்கே ......போன்ற வினாக்களுக்கு இடமில்லை!
ஒன்றுமே மனித சிந்தனையாலோ
வார்த்தையினாலோ ரூகிப்பினாலோ
செய்ய முடியாத மறைபொருள்!

2. சிருட்டிக்கும் சக்தி???வியப்பு!!!
மனித புலன்களுக்கும் பகுத்தறிவிற்கும் அப்பால் இருக்கும்
எண்ணற்ற அண்ட சராசரங்கள்
இவைகளைப் படைத்த பராசக்தி!

3. எமது உலகின் சிருட்டிப்பு? நன்றி!
இறைவனால் வெளிப்படுத்தப் பட்ட
ஒரு  சரித்திரத்தில் (விவிலியத்தில்)
சிருட்டிப்பு வர்ணிக்கப் பட்டிருக்கிறது.
இந்த வர்ணிப்பை ஓர் விஞ்ஞான வர்ணிப்பாக
நினைத்து அல்லது கணித்து விவாதிப்பது மடமை!

விவிலியம் எழுதப்பட்ட காலத்திற்கு முன்பாகவே
மனிதர்கள் சகல படைப்புக்களையும் அவதானித்து வந்தனர்.
பபிலோனிய மக்கள் தங்கள் அவதானங்களை சேகரித்திருந்தனர்.
விவிலியம் எழுதப் பட்ட காலத்தில்
இசரவேல் மக்கள் சூளலில் ஏற்கனவே
பபிலோனிய அவதானிப்புகளிடமிருந்து வந்த
அறிவும் சொற்களும் பாவனையிலிருந்தன.
அவைகளை ஆதாயமாகக் கொண்டுதான்

இறைவன் 6 நாட்களில் 
சூரியனை மையமாக கொண்ட உலகைப் படைத்தார் என்றும்
சகலத்தையும் படைத்து அவைகளின் சிகரமாக
மனிதனைப் படைத்தார் என்றும்
இசரவேல் விவிலிய புத்தகங்களிலிருந்து அறிகிறோம்.
இந்த இறை வெளிப்பாட்டு வரிசையில் தான்
இறைவன் மனிதனாக இயேசுவில் எம் மத்தியில் வந்தார்.
இதை நாம் விசுவசிக்கின்றோம்!!!
நாம் விஞ்ஞான அறிவு வளர்ச்சி மூலம்
படைப்புகள் அனைத்தையும் படிப்படியாக அறிந்து வளருகின்றோம்.
வானம் பூமி தரை கடல்
சூரியன் சந்திரன்கள் பறவைகள் மிருகங்கள் இயற்கை .........
மனிதர்கள் மொழிகள் கலைகள்.....
இவைகளை
படைக்கப் பட்ட எல்லையுள்ள மனித அறிவு முழுமையாக ஒரு பொழுதும் அறிந்து அளக்க முடியாது!!!

மனித அறிவு வளர்ச்சியுடன்
விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே போகும்.
அதற்கும் மனித சரித்திரத்தில்
இறை வெளிபாட்டை தம் கால சூளலுக்கேற்ப எழுதப் பட்ட விவிலிய படைப்பு வர்ணிப்புக்கும் முரண் பாடில்லை!
ஒன்றையொன்று செழிப்புறச் செய்யும்!
விசுவாச அடிப்படையில் விஞ்ஞான வளர்ச்சி
எமது வியப்பை அதிகரிக்கும்!
நன்றியை ஊக்குவிக்கும்!

4. இறைவன் பல வழிகளில் விதத்தில்
வெவ்வேறு மக்களுக்கு தம்மை வெளிப்படுத்துகின்றார்!!!
நன்றி!

மறை பொருளாகிய இறைவன் தம்மை
மனிதனுடைய மட்டுப்படுத்தப் பட்ட 5 புலன்களுக்கேற்ற படி
வெளிப்படுத்த சித்தங் கொண்டார்.
வெளிப்படுத்தல் என்பது ஒரு குறிப்பிட் காட்சியல்ல.
இறைவன் ஒரு காட்சியில் ஒரு மனிதனுக்கு மாத்திரம் தோன்றி
தம்மை பற்றி எல்லாவற்றையும் விளக்கியதில்லை.
God as God never appeared to man,
and man is too Little a creature to face the Almighty God!
But God can condescend to communicate with man in various ways as He choses.
Revelations are from God's will, goodnes and love.
Hence God has revealed Himself in various ways to various People.
உலகில் வாழும் பல் வேறு இனம்
கலை கலாச்சாரத்திற்கும் அவர்களின் சரித்திர சூளலுக்குமேற்க
அடையாளங்கள் நிகழ்வுகள் காட்சிகள் தீர்க்கதரிசிகள் மூலம்
நீண்ட காலங்களாக தம்மை வெளிப்படுத்தி வருகின்றார்.

இவைகளிலிருந்தே பல மதங்கள்
அவைகளின் வழிபாடுகள் தோன்றின.
மதங்களின் அடிப்படை நோக்கம்
இறைவனையும் மனிதனையும் இணைப்பதும்
மனித முன்னேற்றத்திற்கான வழிகளைக் போதித்து
பணி செய்வதே.

ஆகவே எல்லா மதங்களும் அடிப்படை நோக்கில் நல்லவை.
எல்லாம் மனிதனுக்காகவே.
மனிதர்கள் மதத்திற்காகவல்ல மதங்களே மனிதருக்காக!
மதங்கள் வேறு படலாம்
ஆனால் முரணாகவோ போட்டியாகவோ
நடந்து கொள்வது தவறு.
இறைவனின் வெளிப்படுத்தல்களை ஆதாயமாக வைத்தே மனிதன் மதங்களை கட்டியிருக்குறான். ஆகையினால் மதங்கள் கால வளர்ச்சி தேவைக்கேற்ப புதுப்பிக்கப்பட வேண்டும்.
5. இயேசு தோன்றிய விவிலிய வெளிப்பாட்டையே
நன்றியுடன் நான் பின் பற்றுகின்றேன்.
நன்றி!!!
I have accepted the biblical Revelation according to which God became man in Jesus of Nazareth.
பல இறை வெளி பாடுகளில்
ஒன்று யுத மக்கள் பெற்ற வெளிப்பாடு.
பபிலோனிய கிரேக்க நாகரீகங்களைத் தொடர்ந்து
பல னூற்றாண்டுகளாக யுத மக்கள் சரித்திரத்துடன் பின்னிப்
பிணைந்த புத்தகங்கள் தான் விவிலிய புத்தகங்கள்.

இறைவன் மனிதனாக பிறக்க சித்தங் கொண்ட பொழுது
இந்த யுத மக்களின் நிகழ்வுகளிலும் சரித்திரத்திலும்
தம்மை வெளிப் படுத்தினார்!


6. இறைவன் தம்மை எனக்கும் வெளிப்படுத்துகின்றார்!
வியப்பிலும் வியப்பு! நன்றிக்கு மேல் நன்றி!

எனது வாழ்வு முழுவதும் இறைவனை ஊற்றாகவும்
ஒளியாகவும் வழியாகவும் கொண்டதாக நான் கணிக்கின்றேன்.
ஆகையினால் நான் பெற்ற வாழ்வும் வளமும்
எடுத்த திசையும் தீர்மானங்களும்
கொண்ட துணிவும் வெற்றிகளும் அவருடையதே!
எனது சுய சரிதை ஓர் இறை வெளிப்பாடு!






No comments:

Post a Comment