Sunday, 26 March 2017

My daily Prayer & Comment; Comment,எனது நாளாந்த நன்றிப் பாடல்

எனது நாளாந்த நன்றிப் பாடல்

இது வரை செய்த நலன்களுக்காக இறைவா உமக்கு நன்றி!

1. மனிதனாய்ப் படைத்து, தமிழனாய் வழர்த்து,
கிறீஸ்துவின் சீடனாய் பணி செய்ய அழைத்தாய்
அலை கடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி!
இது வரை…….
2.எளிமையில் பிறந்தேன் வறுமையில் வளர்ந்தேன்
திறைமைகள் கொடுத்து உயர்ந்திடச் செய்தாய்
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி!
இது வரை……

3. தன் நலம் தேடி ஓடிய என்னை
பிறர் நல சேவைக்கு அழைத்திட்ட உம்மை
அலை கடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி!
இது வரை…….
4. அறிவின் செருக்கினில் நிமிந்திட்ட என்னை
அன்பின் பணி செய்ய குனிந்திடப் பணித்தாய்
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி!
இது வரை……
5. வருகின்றேன் உன்னிடம் தருகின்றேன் என்னையே
பாவத்தை மன்னித்து பரலோகம் அருள்வாய்
அலை கடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி!
இது வரை.........

குறிப்புகள்
1. மனிதன்! தமிழன்! கிறீத்தவன்! ???
இவை 3 ம்  தெளிவாக இறைவனின் அழைப்புகள். இவைகளே எனது அடையாள வேர்கள்.
அவற்றில் அடங்கியிருக்கும் உள்ளடக்கம் பண்புகள் சிறப்புகள் அனேகம். அவற்றின் நீள அகல ஆளத்தை நாம் வாழ் நாள் முழுவதும் அனுபவிக்கின்றோம். இவற்றில் சக்தி வீரம் அழகு எல்லாம் இருக்கின்றன.
ஆனால் இவைகளை நாம் சீவியத்தில் பேணி வளர்க்க வேண்டும்.
இறைவன் வித்தாகக் கொடுத்ததை மனிதன் வேரிலிருந்து விருட்சமாக வளர்க்க அவரே நீரூட்டுவார்.
2. எளிமை துணிவு திறமை!!!
நான் பிறந்த குடும்பம் எளிமையானது. அச்சகத்தில் ஆங்கில அச்சுக் கோர்த்து உழைப்பவர் தகப்பன்.
வீட்டுப் பணி செய்யும் தாயார். இருவரும் பண்புள்ள அடக்கமான கிறீத்தவர்கள். 4 பிள்ளைகளுடன் வாடை வீட்டில் வாழ்ந்தோம். நாம் எல்லோரும் ஒன்றாக முன்னேற முயற்சித்தோம். இறைவன் 4 பிள்ளைகளுக்கும் படிக்க ஆர்வம் கொடுத்தார். அக்கா தமிழில் படித்து பின்பு ஆங்கிலத்தில் படித்து ஆசிரியையானார். நான் வகுப்பில் எப்பொழுதும் 1ம் இடத்தில் அனேக பரிசுகளைப் பெற்றேன். அகில இலங்கை பரீட்சையில் 1ம் இடத்தைப் பெற்று டபிள் வகுப்பேற்றம் பெற்றேன், அதன் பின் கொழும்பு பல்கலைக் களகம் சென்றேன்.
3. தன் நலம்! பிறர் நலம்! சேவை!
குடும்ப சூளல் ? கடின உழைப்பினால் என்னை வளர்த்து படிப்பித்த பெற்றோரையும் சகோதரரையும் வளர்ப்பதிலே ஆசைப்பட்டேன். நான் படிக்கும் காலத்தில் திறமையான மாணவனாய் இருந்தும் என்னை ஒருவரும் குருவாக வரும்படி அழைக்கவில்லை. ஆகையால்  தமிழ் பெற்றோர்கள் வளமையாய் விரும்புவது போல நானும் நல்ல உத்தியோகம் தேடியிருப்பேன். பள்ளிப் படிப்பு முடிந்தபோது வறுமையின் காரணமாக வங்கியிலும் கடுதாசி தொழிற் சாலைக்கும் செல்ல ஆயத்தமாயிருந்தேன் ஆனால் பல்கலைப்பு முடியும் போது இறைவனின் அழைப்பு வந்தது!

4. அறிவின் செருக்கு! அன்புப் பணி! பாதம் கழுவுதல்!

பள்ளியில் முதலிடத்தை பெற்று வந்த காரணத்தால் மற்றவர் பிழைகளில் கோபம் கொள்வதும் எனது அறிவுத் திறனில் பெருமை கொள்வதும் எனது பெலவீனமாயிற்று. நான் சீறும்காரணத்தால தம்பி தங்கையர் உதவி கேட்க என்னிடம் வருவதில்லை. இதற்காக இயேசு என்னை குனிந்து பாதம் கழுவும் அன்புப் பணிக்கு அழைத்தார்.

5. வருகின்றேன்! தருகின்றேன்! பாவஙகள்! பரலோகம்!

நீண்ட வாழ்வின் கடசிக் கட்டம். மரணத்தை நோக்கி நடக்கின்றேன். ஆனால் பயமில்லை. வாழ்வளித்த இறைவனிடம் என் முழு வாழ்வையும் ஒப்படைக்கின்றேன். எனது வாழ்வின் யதார்த்தம் நான் ஒரு பாவி! நித்திய வாழ்விற்கு எனக்கு உரிமையில்லை. அதை எனக்கு அருளுபவர் அவரே!

No comments:

Post a Comment