இயேசுக்கிறிஸ்து திருச்சபை குருத்துவம்
இன்றைக்கு கிறிஸ்துவின் சீடர்களாகிய நாம் திருச்சபைக்குள்ளே குழுமங்களாக குருக்களின் தலைமைத்துவத்திலே சீவித்துக்கொண்டிருக்கின்றோம். இந்த மூன்று விடயங்களைப் பற்றி அதாவது இயேசுக்கிறிஸ்து யார்? அவருடைய நோக்கு என்ன? என்பது பற்றியும் திருச்சபை என்ன? என்பது பற்றியும் திருச்நபைக்குள்ளே பணியாற்றும் குருக்கள் யார்? என்பதைப் பற்றியும் தெளிவாகப் பிரித்துப்பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது.
1. இயேசுக்கிறிஸ்து
இயேசுக்கிறிஸ்து இறைவனினாலே மனிதர்களின் மீட்புக்காக அனுப்பப்பட்டவர். இறைவனின் சுதன் என்று தம்மை வெளிப்படுத்தியவர். மனுக்குலத்தின் இரட்சணியத்திற்காக மனிதனாக உருவெடுத்தவர். அவருடைய வாழ்வுஇ போதனைஇ அவர் நிறைவேற்றிய பாடுகள் மரணம் உயிர்ப்பு இவையெல்லாம் சேர்ந்து அந்த இயேசுக்கிறிஸ்து என்னும் மறைபொருளை ஒரு பகுதியை விளக்குகின்றன. ஆனால் அவற்றுடன் இயேசு கிறீஸ்து எனும் மறைபொருளின் முழுமையல்ல.
மனிதனாகத் தோன்றிய இறைவன் இயேசுவின் பயணம் இந்த உலகத்திலே ஆரம்பித்தது. இறையரசு அண்மித்து விட்டது மனம் திரும்புங்கள் என்று ஆரம்பித்தவர் அதன் வழிகளைக்காடடிடஇ அதன் உண்மைகளைப் போதித்துஇ அந்த இறையரசில் இறைவனின் உருவத்தை சுட்டிக்காட்ட தம்மை வெளிப்படுத்தினார். நானே வழியும் உண்மையும் சீவியமும் என்றார். ஆகையினாலே புதுமைகள் செய்து அவர் இறுதியிலே தமது உயிர்ப்பின் பின் திரும்பவும் விண்ணகத்திற்குச் சென்றுவிட்டார். அவருடைய பணி உலகத்திலே முடிவுற்றாலும் அது நித்தியத்தை அதாவது காலவரையற்ற பணியாக அது நித்திய சீவியத்தைச் சுட்டிக்காட்டும் பணியாக இருந்துகொண்டே இருக்கும்.
2. திருச்சபை
இயேசுவின் சீடர்கள் பெந்திக்கோஸ்தே விழாவிலே பெற்றுக்கொண்ட ஆவியின் துணிவுடன் அந்த இயேசுவுக்குச் சாட்சியம் பகிர்ந்து அந்த இயேசுவின் பெயராலே சீடர்களை ஒன்றாகத் திரட்டி குழுமங்களாக சிறிய குழுக்களாக வெவ்வேறு இடத்திலே அடியிட்டனர்;. இவர்கள் எல்லோரும் இயேசுவின் சீடர்கள் அவருடைய படிப்பினைகளை வெளிப்படுத்துவதிலேயும் அவர் விட்டுச்சென்ற அந்த திருவுணவு அதாவது நற்கருணைப் பகிர்தல் செய்வதிலேயும் அவர் வழியாக மீட்பு வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியிலே வாழ்ந்துகொண்டிருந்தனர். சீடர்களாக அந்த குழுக்கள் யூதேயாவில் இருந்து அயல்நாடுகளுக்குப் பரந்து உரோமை இராஜ்ஜியத்திற்குப் பரந்து மற்றைய கண்டங்களுக்கும் பரவி இன்றைக்கு 2000 ஆண்டுகளிற்குப் பின்பு திருச்சபை மிகப்பிரமாணடமான அமைப்பாக ஒரு சிறந்த மதத்தின் அமைப்பாகத் திகழ்கின்றது.
இந்தத் திருச்சபை இயேசுவை அடிப்படையாகக் கொண்டது. அவரைத்தான் மையமாக வைத்து இந்த அமைப்பு பிறந்து வளர்ந்து இன்றைக்கு சீவிக்கின்றது. ஆனால் தெய்வீக ஆரம்பத்துடன் தொடங்கிய மதம் எல்லா மதங்களும் இறை வெளிபாட்டின் அடிப்படையிலேதான் தோன்றுகின்றன. திருச்சபையும் மனிதர்களுடைய அமைப்பு என்ற மட்டிலே அதன் உள்ளரங்கத்திலே; தெய்வீகத்தைக் கொண்டிருந்தாலும் அந்த மனிதர்களுடைய முயற்சியினாலே கட்டியெழுப்பப்பட்ட அமைப்புக்கள் ஒழுங்கள் இவையனைத்தும் எல்லைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இறைவன் இயேசுவையும் அவரின் மறைபொருள் செயல்களையும் அவருடைய தன்மையையும் முழுமையாக இந்த அமைப்புக்குள்ளே அடக்கி ஒடுக்கிவிட முடியாது. இந்த திருச்சபைக்குள்ளே தான் நாங்கள் செய்யும் அனைத்தையும் அந்த இயேசுக்கிறிஸ்துவுக்குப் பிரமாணிக்கமாகச் செய்துகொண்டிருக்கின்றோம். ஆனால் சிலவேளைகளில் நாங்கள் எடுக்கும் முயற்சிகள் தவறாக இருப்பின் அவைகளை நாங்கள் சீர்திருத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம். திரும்பத் திரும்ப திருச்சபை சங்கங்களைக்கூட்டி புதுப்பிக்கின்றது. தன்னை சீரமைக்கின்றது. இதுதான் இந்தத் திருச்சபையின் வளர்ச்சி.
3. குருத்துவம்
இந்தக் குருத்துவம் எங்கேயிருந்து வந்தது? இயேசுக்கிறிஸ்துவை இந்த அவர் உலகத்திலே இருந்தவர்கள் பரிசேயர்கள் குருக்கள் இவர்களைப் பற்றித் தமது அபிப்பிராயத்தை தெட்டத் தெளிவாகக் கூறியிருக்கின்றார். அவர் பழைய ஏற்பாட்டிலே தோன்றிய தீர்க்கதரிசிகளைப் போல இற்றிலே அருளப்பரைப் போலவும் ஒரு போதகராக பிரசங்கியாக வழிசங்கி நாடோடிப் போதகராகவும் செயற்பட்டார். ஆகையினாலே கிறிஸ்துவை இலேசாக நாங்கள் ஒரு தீர்க்கதரிசி அல்லது போதகர் என்று விளங்கிக்கொள்ளலாம். ஆனால் அவரை ஒரு குருவாக விளங்குவதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும். அவர் தானே குரு என்று ஒருபொழுதும் சொல்லவில்லை.
அவர் காலத்திலே செயற்பட்ட குருக்களை அவர்களுடைய பொய்த்தன்மை அரசியற் தன்மை இவைகளை வலுவாகக் கண்டித்தார். ஆனால் திருச்சபைக்குள்ளே அந்த தோன்றிய தலைவர்கள் முதற்சீடர்கள் அப்போஸ்தலர்கள் அவரைப் பின்தொடர்ந்த குழுமத்தலைவர்கள் இவர்கள் அனைவரும்கூடி செயற்படும்போது இந்த அமைப்புக்களைக் கொண்டுநடத்துவதற்கு மூப்பர்களைத் தெரிந்தெடுத்தார் தலைவர்களைத் தெரிந்தெடுத்தார். அவர்களை சபைகளின் முதியோர் என்று அழைத்தார்கள். அவர்களுக்கென்று விசேட அதிகாரம் இருந்தது. கிறிஸ்துவின் படிப்பினைகளைப் போதிப்பதிலேயும் அவருடைய வழிகளைச் சுட்டிக்காட்டுவதிலேயும் இந்த முதியோருக்கு விஷேச பணிகள் இருந்தன: இதுதான் 1ம் நூற்றாண்டிலே 2ம் நூற்றாண்டிலே நடந்த முயற்சி.
அதனைத் தொடர்ந்து இந்த முதியவர்களுக்குள்ளே முக்கியமான ஒருவர் ஒரு ஆயராக தேர்தெடுக்கப்படுகின்றார் தலைமைத்துவத்திலே. முதியோர்களில் மிகவும் முக்கியத்துவம் வகிக்கும் ஆயர். அதன்பின்பு அவர்கள் தங்களுக்கு உதவிக்காக இன்னுமொரு விதமானவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். சமூக பணிக்காக மக்களுக்கு உதவிசெய்வதற்காக தியாக்கோன் என்பவர்களைத் தேர்தெடுத்தார்கள்.
இப்படியாக 2ம் நூற்றாண்டிற்குப் பின்புதான் இந்த முதியோரும் ஆயர்களும் தியாக்கோனும் தோன்றினார்கள். இயேசுவின் காலத்திலே இவர்கள் இருக்கவில்லை. திருச்சபைக்குள்ளேயே பின்பு பிறந்தவர்கள் உதித்தவர்கள். ஆனால் இவர்கள் வந்து முக்கியமான சீடத்துவம் பெற்றவர்கள். பொறுப்புள்ளவர்கள் வழிகாட்டிகள் மேய்ப்புப் பணி செய்பவர்கள். இவை அனைத்தும் உண்மை. ஆனால் நாங்கள் இந்த குருத்துவத்தை திருச்சபையின் குருத்துவமாகத்தான் பார்க்கின்றோம்.
திருச்சபை அமைப்புக்குள்ளே இந்தக் குருத்துவமும் வளர்ந்துகொண்டே வந்திருக்கின்றது. இன்றைக்கு இருப்பது போல அன்றைக்கு குருக்கள் இருக்கவில்லை. அவர்கள் முதியோர் வழிகாட்டுபவர் ஆயர்கள் மேய்ப்புப் பணி செய்பவர்கள் என்று இருந்தார்கள். அவர்கள் தான் இந்தப் பணிகளை ஏற்று திருச்சபைகளை வழிநடத்தினார்கள்.
14ம் 15ம் நூற்றாண்டுகளிலே இந்தத் திருச்சபைக்குள்ளே குருக்கள் தவிர துறவிகளும் வந்தார்கள். அதாவது சீடர்கள். குருக்களாக இல்லாவிட்டாலும் அவர்கள் நெருக்கமாக இயேசுவைத் தமது குழும வாழ்விலே பின்பற்றிக்கொண்டனர். இப்படி இருந்து வந்த காலத்திலே தான் 15ம் 16ம் நூற்றாண்டுகளில் திருச்சபை பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியது. விவிலியத்தை இலத்தீன் மொழியிலே இருந்து தாய்ப்பாஷைகளுக்கு மொழிபெயர்த்தபின் திருச்சபைகளுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. திருச்சபையில் குருக்கள் மாட்டீன் லூதர் போன்றவர்கள் திருச்சபைக்கு எதிராக சீர்திருத்த இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க அதிலிருந்து திருச்சபை கூறுகூறாகப் பிரியத்தொடங்கிற்று.
இதன் பின்புதான் 16ம் 17ம் நூற்றாண்டில் தான் திருச்சபை தனது அமைப்பை குருத்துவத்தை ஆயர் சங்கங்கள் இவைகளைப் பலப்படுத்தி ஒழுங்குகள்படுத்தி திடப்படுத்தி கட்டியெழுப்பினர். இன்றைக்கு இருக்கும் நடைமுறைகள் குருமடங்கள் குருக்கள் ஆயர்கள் செயற்படும் முறைகள் அனைத்தும் 16ம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றிய அமைப்புகளும் வழிமுறைகளும். இவைகளை நாங்கள் எப்போதும் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். இவைகள் எல்லாம் சேர்ந்து அந்த இயேசு என்னும் மறைபொருளை முழுக்க முழுக்க உள்வாங்க முடியாது. இயேசு என்னும் மறைபொருள் இந்த அமைப்புக்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். ஆவர் இறைமகன். ஆகையினாலே ஒரு மனித அமைப்பிற்குள்ளே இறைமகனை நாம் முழுமையாக கடைத்தெடுக்க முடியாது.
இயேசுவின் சீடர்கள் அமைப்பிலே இருந்தாலும் ஆவியினால் ஏவப்பட்டு சீவித்தார்கள். அவர்களுடைய ஆவி யூதர்கள் அமைப்புகளுக்கு அப்பாற்செல்ல தூண்டிற்று. ஆகையினால்தான் இன்றைக்கு நாங்கள் இன்றைக்கு நடைமுறையிலே இருக்கும் குருத்துவத்தை பார்க்கும்பொழுது அவற்றை நாங்கள் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். இறைமகன் இயேசு கொண்டுவந்த இறையரசைப் பரப்ப அவருடைய போதனையைப் பறைசாற்ற அவரின் நினைவிலே அருட்சாதனங்களைக் கொடுக்க திருச்சபையினாலே ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பிலே இருக்கும் குருக்கள் இன்றைக்கு அமைப்புகளிலே இருந்தாலும் அதற்கு மேலாகத் தமக்குக் கொடுக்கப்பட்ட தனிப்பட்ட முறையிலே கொடுக்கப்பட்ட அந்தக் கொடைகளைப் பெற்று ஆவியின் ஏவுதலைப் பெற்றுச் செயற்பட வேண்டும். குருக்கள் அமைப்பிலே இருந்தாலும் தங்களை அமைப்புமயமாக்கக்கூடாது. அவர்கள் ஆவியினாலே ஏவப்பட்டவர்கள். திருச்சபைக்குள்ளே இருந்துகொண்டே ஆவியின் செயற்பாடுகளைச் செய்ய அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment